|
ஜிகாம்ப்ரி பற்றி
ஜிகாம்ப்ரி ப்ரான்ஸ் தேசத்தில் சொய்சோன் நகரில் 2003 ஆம் வருடம் மே மாதம் 25 ஆம் தேதி நடந்த நிகழ்வுகளில் இலவச மென்பொருட்களுக்கான விருதை வென்றது.
ஜிகாம்ப்ரி க்னூ திட்டத்தின் பகுதியாகும். இது உலகபுதையல்களின் நண்பர்கள் ஆல் அங்கீகரிக்கப்பட்டது. Friends of the World Treasures. நீங்கள் ஜிகாம்ப்ரி ஐ இங்குள்ள [மென்பொருட்கள் பட்டியலில் -http://directory.fsf.org/education/elementary/] காணலாம். இது இவர்களால் பராமரிக்கப்படுகிறது. எஃப்எஸ்எஃப் மற்றும் யுனெஸ்கோ.
இந்த மென்பொருள் க்னூ/ ஜிபிஎல் V3 உரிமத்தில் வெளியிடப்படுகிறது. இது ஒரு அங்கீகாரம் பெற்ற பொதி.GNU. ஜிகாம்ப்ரி க்னூ/லினக்ஸ், மாக் ஓஎஸ் 10, விண்டோஸ் மற்றும் பிற லீனக்ஸ் பாதிப்புகளில் இயங்கும்.
ஜிகாம்ப்ரி எந்த உத்திரவாதத்துடனும் வழங்கப்படவில்லை. இது இலவச மென்பொருள். மேற் கண்ட அதே க்னூ/ ஜிபிஎல் V3 உரிமத்தில் நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம்.

ஜிகாம்ப்ரியில் பயனர் இடைமுகத்தை எளிமையாகவும் சுகமாயும் வைக்க சிறப்பு கவனம் கொடுக்கப்படுகிறது. எளிதாக இருப்பினும் மிகச்சிறு குழந்தைகளுக்கும் கூட ஜிகாம்ப்ரி பழக்கமாகி விடக்கூடியது. குழந்தைகள் தாமே பல விஷயங்களை கண்டுபிடிக்கலாம். இருப்பினும் ஆசிரியரோ அல்லது பெற்றோரோ கூட இருந்தால் இன்னும் அதிக பயன் கிட்டும்.
நீங்கள் எல்லா செயல்களுக்கும் திரைவெட்டுகளை காணலாம். இங்கு
ஜிகாம்ப்ரி தடையின்றி இயங்க கணினியில் சில்லு திறன் PC 233MHz உடன் 512 எம்பி நினைவகம் போதும். 300 எம்பி வட்டு இடம் தேவை. மேலும் குறைந்த திறன் கணினியில் க்னூ/லீனக்ஸ் இன் லகுவான சார்ந்தோன் தொழில் நுட்பத்தில் (எக்ஸ் முனையங்களில்) இயங்க முடியும்.
ஜிகாம்ப்ரி லகுவான சார்ந்தோன் சூழலில் இயங்க வேறொரு மென்பொருள் இவர்களது அருமையான வேலையால் சாத்தியமாகிறது. LTSP.
பள்ளிகளை இலக்காக வைத்துள்ள முக்கிய க்னூ/லீனக்ஸ் வினியோகங்கள்: எடுபுண்டு, அபுலெடு, ஸ்கோல் லீனக்ஸ்.
ஒரு காமிக் ஜிகாம்ப்ரி நமீபியாவில் எப்படிபயன்படுகிறது என்பதைக்குறித்து.
ஐடி வோர்ல்ட்: விண்டோஸ் முழுநிறை அதிகாரத்தை தோற்கடியுங்கள், உங்கள் குழந்தைகளுக்கு லீனக்ஸ் சொல்லிக்கொடுங்கள்.
ஐரோப்பிய கமிஷனிடமிருந்து ஒரு ஆய்வு கட்டுரை .ஒரு ஸ்லோவாக் பள்ளியில் ஜிகாம்ப்ரி பயன்பாடு
குழந்தைகள் பள்ளியில் ஜிகாம்ப்ரி எக்ஸ்ட்ரீமடுராவில் (ஸ்பெய்ன்)
ஜிகாம்ப்ரி பயன்பாடு ஒரு பெல்ஜியம் பள்ளியில்
ஜிகாம்ப்ரி பயன்பாடு ஒரு இத்தாலிய பள்ளியில். இத்தாலியில் இன்னுமொரு ஜிகாம்ப்ரி குறித்த ஆவணமாக்கம்.
ஸ்லோவாகியாவில் எதிர்கால ஆசிரியர்களுக்கு கணினி வகுப்பு பயிற்சி
ஏப்ரல் 2002 இல், பிரெஞ்சு மொழியில் ஒரு கட்டுரை ஒரு பிரெஞ்சு லீனக்ஸ் சஞ்சிகையில் வெளியிட்டபடி.
ஆப்செட் மற்றும் ஜிகாம்ப்ரி பற்றி மேலும் அறிய: (பிரெஞ்சு மொழியில்) ஆப்செடி இலிருந்து இலவச மென்பொருள். இது யுனெஸ்கோவால் ஆதரிக்கப்பட்டது
சைல்ட்ப்ளே ஜிகாம்ப்ரி போலவே அணுகு முறை; ஆனால் பைத்தான் மொழி பைகேம் நூலகம் (எஸ்டிஎல் அடிப்படை) பயனாகிறது. க்னூ லீனக்ஸ், வின்டோஸ் ஆகியவற்றில் வேலை செய்யும்.
கேடீஈ எடுடெய்ன்மெண்ட் திட்டம்: கேடீஈ சூழலுக்கான உயர்தர மென்பொருள்.
புதிய வகை மென்பொருள் இதில் பலவித நடைமேடைகளுக்கான திறந்த மென்பொருள் கிடைக்கிறது: விண்டோஸ், மாகின்டாஷ், லீனக்ஸ், யூனிக்ஸ், பீயாஸ், இன்னும் பிடிஏ விடியோ விளையாட்டு பெட்டிகள் கூட!. குறிப்பாக பிரபலமான டக்ஸ் பெயின்ட்
மிகச்சிறிய குழந்தைகளுக்கு இன்னும் ஒரு மென்பொருள் சொடுக்கியை பயன்படுத்த சொல்லித்தருகிறது. PySyCache