|
வாங்க / நன்கொடை
க்னூ/ லீனக்ஸ் பயன்பாட்டை ஆதரிக்கும் வகையில் விண்டோஸ் பதிப்பில் உள்ள செயல்கள் குறைக்கப்பட்டு உள்ளன. அனைத்தும் தேவை எனில் ஒரு கட்டணம் செலுத்தி அவற்றை பெறலாம் .
ஜிகாம்ப்ரியின் விண்டோஸ் பதிப்புகள் இரண்டு உள்ளன:
ஜிகாம்ப்ரி 7.4. இது விண்டோஸ் 98 அல்லது அதற்கும் அடுத்த பதிப்புகளில் இயங்கும். இதனுடன் அனைத்து செயல்களும் கிடைக்கா. இதை இந்த பக்கத்தில் காணலாம். விண்டோஸ் சின்னத்தை பார்த்து எந்த செயல்கள் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.
ஜிகாம்ப்ரி 8.3 உம் அதற்கு மேலும். இது விண்டோஸ் 2000 அல்லது அதற்கும் அடுத்த பதிப்புகளில் இயங்கும். இதை செயல்படுத்திய பின் க்னூ/லீனக்ஸ் இல் கிடைக்கும் அத்தனை செயல்களும் கிடைக்கும்.
இந்த முன்காட்சியை முழுதும் பயன்படுத்த இந்த கோப்பை தரவிறக்கவும். gcompris-X.X.exe. உங்கள் வன்வட்டில் அதை சேமித்து இரட்டை சொடுக்கு சொடுக்கி அதை நிறுவுங்கள். அப்புறம் வழி காட்டியை தொடரவும். (அடுத்து, அடுத்து, ...)
கட்டணம் செலுத்தி செயலாக்க குறியீட்டை பெற கீழுள்ள பொத்தானில் சொடுக்கவும். கட்டணம் கிடக்கப்பெற்ற 24 மணி நேரத்திற்குள் தேவையான குறிப்புகளுடன் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப் படும். ஒரு வேளை உங்களுக்கு இந்த மின்னஞ்சல் வரவில்லை எனில் இந்த மின்முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்: bruno.coudoin@gcompris.net
உங்கள் பள்ளிக்கு தேவை எனில் என்னை தொடர்பு கொண்டு கட்டணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
இப்படி பதிவது, பதிந்த 2 வருடங்களுக்குள் வெளிடப்படும் புதிய பதிப்புக்கு இலவச மேம்பாடு உங்களுக்கு கிடைக்க வழி செய்யும். பின்னர் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் இதை பயன்படுத்தலாம்.
கல்வியில் இலவச மென்பொருள் கிடைக்க ஆதரவு தந்தமைக்கு நன்றி!
ப்ரூனோ கொடீன்.
நீங்கள், உங்கள் குழந்தைகள், உங்கள் வகுப்பு ஜிகாம்ப்ரியை நேசிக்கிறீர்கள். நீங்கள் இந்த திட்டத்தை ஆதரிக்க இப்போது ஒரு வாய்ப்பு உள்ளது.
மென்பொருளை உருவாக்குவது நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும் செயல். அதற்கு வன்பொருளும் வேண்டி இருக்கிறது; இதை மக்களிடம் எடுத்துச்செல்ல அலைய வேண்டி இருக்கிறது. சுருக்கமாக சொன்னால் இந்த திட்டத்தில் என் முதலீட்டை தொடர உங்கள் உதவி தேவையாக இருக்கிறது.
கீழே உள்ள பொத்தானில் சொடுக்கி உங்களால் இயன்ற பொருளை நன்கொடையாக தர இயலும்:
இலவச கல்வி மென்பொருளுக்கு உதவியமைக்கு நன்றி!
ப்ரூனோ கொடீன்.