Bruno Coudoin
(anim.xml)
படம் வரைதல் அசைவூட்டம் கருவி
இந்த விளையாட்டில் குழந்தைகள் இயல்பாக வரையலாம். இலக்கு என்னவென்றால் நாற்கோணம், வளையம் கோடுகள் போன்ற மூலமான வடிவங்கள் மூலம் எப்படி கவர்ச்சிகரமான வடிவங்களை வரைவது. குழந்தைகளுக்கு அதிக தேர்வுகளைத் தர சில படங்களை பயன் படுத்தத் தரலாம்.
ஒரு வரையும் கருவியையும் கீழே ஒரு வண்ணத்தையும் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் வெள்ளை இடத்தில் சொடுக்கி இழுத்து ஒரு புதிய வடிவை உருவாக்கவும். வரைந்து முடித்த பிகீழே உள்ள ஒரு சின்ன செவ்வகத்தை தேர்ந்து எடுப்பதன் மூலம் வேலை செய்ய நீங்கள் ஒரு புதிய சட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். இது நீங்கள் வரைந்த படத்தின் நகலை உருவாக்கும். பின் நீங்கள் இதை திருத்தலாம். உருப்படிகளை நகர்த்தலாம், நீக்கலாம், சேர்க்கலாம். இப்படி பல படங்கள் வரைந்தபின் பிஃலிம் பொத்தானை சொடுக்கினால் உங்கள் படங்கள் அனைத்தும் ஒரு ஸ்லைடு காட்சியாக தொடர்ந்து வலம் வரும். இதை மாற்றும் வேகத்தையும் கட்டுப் படுத்தலாம். பார்வை பாங்கில் வரைதல் பொத்தானை சொடுக்கினால் வரையும் பாங்குக்கு வரலாம். திரையின் இடது கீழ் மூலையில் உள்ள பிம்ப தேர்வி பொத்தானை சொடுக்கி ஒவ்வொரு படத்தையும் திருத்தலாம். ப்ளாப்பி பொத்தான் மற்றும் அடைவு பொத்தான்களை சொடுக்கி இவற்றை சேமிக்கலாம் அல்லது ஏற்றலாம்.