Home page
Bruno Coudoin (searace.xml)
பந்தயத்தில் ஜெயிக்க படகை மிகச் சரியாக செலுத்துங்க.
இந்த செயலில் கணினியில் எப்படி கட்டளைகளை உள்ளிடுவது என கற்கலாம். மொழி மிக அடிப் படையாக இருந்தாலும் நீங்கள் முன் யோசனையும் நிரலாக்கமும் கற்பீர்கள். இந்த செயலை நிரலாக்கம் பற்றி குழந்தைகளுக்கு படிப்பிக்க பயன்படும்.
உரை உள்ளீட்டில் உங்க படகை கட்டுப் படுத்த ஒரு வரியில் ஒரு கட்டளையை உள்ளிடுங்க. இரண்டு உள்ளீட்டு இடங்கள் இடையில் ஆதரவு உள்ள கட்டளைகள் காணப் படும். 'left' மற்றும் 'right' கட்டளைகளை டிகிரிகளில் கோணம் தொடர வேண்டும். இந்த மதிப்புக்கு 'left' மற்றும் 'right' கட்டளைகளின் 'parameter' எனப் படும். முன்னிருப்பு 45 டிகிரிகள். 'forward' கட்டளை அடுத்து ஒரு தூரத்தை ஏற்றுக் கொள்ளும். முன்னிருப்பு 1. எ-டு: - left 90: முன்னால் 90 டிகிரிகள் இடது பக்கம் திரும்பவும். -forward 10: 10 அலகுகள் (அளவு கோலில் காட்டியபடி)முன் செல்லவும். இலக்கு திரையின் வலது ஓரத்தை அடைவது. (சிவப்பு கோடு)முடிந்த பிறகு நிரலை மேம் படுத்தலாம். அதே வானிலையில் ஒரு புதிய பந்தயத்தை மீண்டும் முயல் பொத்தானை அமுக்கி துவக்கலாம். நீங்கள் சொடுக்கியை திரையில் எங்கு வேண்டுமானாலும் சொடுக்கி இழுத்து தூரத்தையும் கோணத்தையும் தெரிந்து கொள்ளலாம். அடுத்த மட்டம் சென்றால் மேலும் அதிக குழப்பமான வானிலையை காணலாம்.